தேர்தல் அட்டவணை:
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: 22.09.11
மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: 29.09.11
மனுக்கள் பரிசீலனை: 30.09.11
வாபஸ் பெற கடைசி நாள்: 03.10.11
முதற்கட்ட வாக்குப் பதிவு: 17.10.11
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு: 19.10.11
வாக்கு எண்ணிக்கை: 21.10.11
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நாள்: 25.10.11 மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல்: 29.10.11.
உள்ளாட்சித் தேர்தல்கள் 2011 – வேட்புமனு இறுதிப் பட்டியல் தொகுப்பு
நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கான நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதனால், நான்கு விதமான ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
மொத்த ஓட்டுச் சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்
உள்ளாட்சித் தேர்தலில், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், ஓட்டுப் பதிவு, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள், ஊரக பகுதிகளிலும், 25 ஆயிரத்து, 590 ஓட்டுச் சாவடிகள், நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 4,876 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை, இந்திய தேர்தல் கமிஷனிடம் பெற்று உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக தேர்தல் கமிஷன் தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதன் முதலாக ஆன்-லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
* மொத்தம், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
* இவர்களில், 2 கோடியே, 32 லட்சத்து, 98 ஆயிரத்து, 838 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே, 30 லட்சத்து, 37 ஆயிரத்துல 930 பேர் பெண் வாக்காளர்கள். இதர வாக்காளர்கள், 611
*’ஊரக பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர்.
* நகர்ப்புறங்களில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான, “டெபாசிட்’ தொகையை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:
பதவி பொது எஸ்.சி., – எஸ்.டி.,
ஊராட்சி உறுப்பினர் 200 100
ஊராட்சித் தலைவர் 600 300
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 600 300
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000 500
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் 1,000 500
நகராட்சித் தலைவர் 2,000 1,000
மாநகராட்சி மேயர் 4,000 2,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் 500 250
நகராட்சி வார்டு உறுப்பினர் 1,000 500
மாநகராட்சி உறுப்பினர் 2,000 1,000
தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம்: நகர்புற உள்ளாட்சிகளில் 663 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 2,046 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 915 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 17 ஆயிரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஐந்து அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஏழு அல்லது எட்டு அலுவலர்கள் வீதமும், 6 லட்சத்து 30 ஆயிரம் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பெட்டிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்: இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவிற்கு ஊரகப் பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகளும், நகர்புற பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகளும், 80 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
வேட்பாளர்கள் செலவு எவ்வளவு? வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, மாநிலத் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. “தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தேர்தல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும்’ என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பதவி செலவு(ரூபாயில்)
ஊராட்சி வார்டு உறுப்பினர் 3,750
ஊராட்சி தலைவர் 15,000
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 37,500
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 75,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் 56,250
முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி தலைவர் 1,12, 500
தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி தலைவர் 2,25,000
மாநகராட்சி மேயர் 5,62,500
சென்னை மாநகராட்சி மேயர் 11,25,000.
Press Release Handbook for Candidates (Rural) |
For read in English: http://currentaffairsandexam.blogspot.com/2011/09/tamilnadu-local-body-elections-2011.html
Interest to read good. print management software and web 2 print Keep Updating.