காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்பியல் சாதனையாளர்கள் பற்றிய சிறிய அறிமுகம்…
ஜனவரி
1. எஸ்.என்.போஸ் (1894) – சத்தியேந்திர நாத் போஸ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயற்பியலாளர். தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங் என்ற புத்தகத்தில் பிளாங், யூகமாக எழுதியிருந்த ஒரு சமன்பாட்டை சரியாக எழுதி வெளியிட்டார். அதன் பெயர் போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல். அப்போது அவருக்கு வயது 30.
2. கிளாஸியஸ் (1822) – ருடால்ஃப் ஜூலியஸ் இம்மானுவேல் கிளாஸியஸ், ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். கார்னட் சைக்கிளின் தத்துவத்தையும், வெப்பத்தின் கொள்கையையும் வெளியிட்டவர். 1850-ல் தெர்மோடைனமிக்கின் இரண்டாவது விதியைக் கண்டுபிடித்தார். 1865-ல் எண்ட்ரோபி தத்துவத்தை அறிமுகப்படுத்தினார்.
4. ஜோசப்ஸன் (1940) – முதன்முதலில் சூப்பர் கரண்ட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். வோல்டேஜ் இல்லாமல் அதிக தூரம் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்லாமல், மின்சாரத்திற்கும் வோல்டேஜிற்கும் இடைப்பட்ட கணக்கீடுகளைக் கண்டுபிடித்தார்.
8. ஸ்டீபன் ஹாக்கிங் (1942) – ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்தில் பிறந்தவர். அண்டவியல், குவாண்ட்டம் ஈர்ப்பு, பிளாக் ஹோல்ஸ், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பிளாக் ஹோல்ஸிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டுள்ளது.
9. ஹர்கோபிந்த் கொரானா – பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூறியல் உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக் குறியீடு பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். 1968ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
13 வீன் (1864) – வில்லெம் வீன் என்று அழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன், ஜெர்மானியர். வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.
13 ராகேஷ் சர்மா (1949) – பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். விண்வெளிக்குச் சென்ற 138வது வீரர் இவர்.
15 எட்வர்ட் டெல்லர் (1908) – ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். ஹைட்ரஜன் குண்டின் தந்தை இவர். ஸ்ப்பெக்ட்ரோகோபி, மாலிக்யூலர் பிசிக்ஸ், நியூக்ளியர் சயின்ஸ் போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
17 பெஞ்சமின் பிராங்க்ளின் (1706) – ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த அறிவியலாளர். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. பிராங்க்ளின் ஸ்டவ், ஓடோமீட்டர், பை ஃபோக்கல்ஸ், லைட்னிங் ராட் போன்றவை இவரது கண்டுபிடிப்புகள்.
17 ரால்ஃப்.எச். பவ்லர் (1889) – பிரிட்டிஷ் இயற்பியலாளர். வானியல் ஆராய்ச்சியாளரும் கூட. 1928 ஆம் ஆண்டு எலக்ட்ரான் எமிஷன் மற்றும் எலெக்ட்ரான் பாண்ட் தியரி குறித்து ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளார். 1931-ல் தெர்மோடைனமிக்ஸ் பூஜ்ஜிய விதிகளுக்கு வித்திட்டவர்.
18 பால் ஏர்ன்பெஸ்ட் (1880) – டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ஸ்ட்டாடிஸ்டிக்கல் மெக்கானிக்ஸ், பேஸ் டிரான்சிஷன் போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
19 ஜேம்ஸ் வாட் (1736) – ஸ்காட்லாந்து நாட்டுக்காரர். நீராவி இயந்திரத்தை உருவாக்கியவர்.
20 ஆண்ட்ரூ மேரி ஆம்ப்பியர் (1775) – பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். கணிதவியலாளரும் கூட. மினகாந்தவியலை கண்டுபிடித்தவர். மின்சாரத்தின் அலகாக ஆம்ப்பியர் என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
22 லேவ் லேண்டா (1908) – ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் மெக்கானிக்ஸ், டென்சிட்டி மேட்ரிக்ஸ் போன்றவைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
23 பால் லங்கேவின் (1872) – பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். பேரா மேக்னட்டிசம் மற்றும் டயா மேக்னட்டிசம் துறை ஆய்வுகளில் ஈடுபட்டவர். முதல் உலகப்போரின் போது பீசோ எலக்ட்ரிக் விதியைப் பயன்படுத்தி அல்ட்ரா சவுண்ட் அலைகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தைக் சரியாக கண்டுபிடிக்கும் யுக்தியை வகுத்துத்தந்தார். .
23 ஹைடேக்கி யுகாவா (1907) – ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹைடேக்கி யுகாவா, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத்துகளைக் கண்டறிந்தவர். .
25 ராபர்ட் பாயில் (1627) – அயர்லாந்து நாட்டு இயற்பியல் மற்றும் வேதியியலாளர். நவீன வேதியியலின் முன்னோடி விஞ்ஞானி.
28 ராஜா ராமண்ணா (1925) – கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணு விஞ்ஞானி.
29 எட்வர்ட் மார்லே (1838)- எட்வர்ட் வில்லியம்ஸ் மார்லே, குரோனோகிராப்பை முதன்முதலில் வடிவமைத்தவர். வளிமண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்களின் கலவையின் அளவை சரியாக கணித்தவர்.
31 லேங்மூர் (1881) – இர்விங் லேங்மூர், அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியலாளர். ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எலெக்ட்ரானின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர். ஹைட்ரஜன் மூலம் வெல்டிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.
31 மோஸ்பியர் (1929) – திட இரிடியத்தில் உள்ள அதிர்வுகளை முதன்முதலில் கணித்தவர்.
பிப்ரவரி
2 கிராமர்ஸ் (1894) – ஹான்ஸ் கிராமர், டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். அட்டாமிக் எலக்ட்ரானில் போட்டான் வெளிப்பாடு குறித்த கிராமர்ஸ் ஹெய்சன்பர்க் சூத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்.
4 ஹண்ட் (1896) – பிரட்ரிக் ஹெர்மான் ஹண்ட் என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் தியரியில் அணுக்களின் கட்டமைப்பு குறித்து அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். குவாண்டம் டனலிங் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.
8 டேனியல் பெர்னோலி (1700) – நெதர்லாந்து நாட்டு கணிதவியலாளர். கணிதத்தில் நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் சூத்திரங்களை வகுத்தவர். இவர் பெயரில் உள்ளது பெர்னோலி தியரம் என்ற கணக்கீடு.
10 டபிள்யூ. பிராட்டெய்ன் (1902) – வால்ட்டர் ஹோசர் பிராட்டெய்ன், அமெரிக்க இயற்பியலாளர். ஜான் பார்தீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து
டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
11 கிப்ஸ் (1839) – ஜோசய்யா வில்லார்ட் கிப்ஸ், அமெரிக்க விஞ்ஞானி. வெக்டர் கணிதத்தை அறிமுகப்படுத்தியவர்.
11 தாமஸ் ஆல்வா எடிசன் (1847) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், போனோகிராப்பை கண்டுபிடித்தவர். செய்முறைக்கான ஒளிவிளக்கு, மோஷன் பிக்சர் காமிரா போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்.
12 ஹெய்ன்ரிச் லென்ஸ் (1804) – ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். 1833-ல் எலக்ட்ரோ டைனமிக் குறித்த லென்ஸ் விதியை வெளியிட்டார். கடல்நீரில் உள்ள இயற்பியல் குணங்களைக் கொண்டு பருவநிலை மாற்றத்தை கணித்தவர்.
13 வில்லியம் ஷாக்லே (1910)- டிரான்சிஸ்டர் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர். 1950 வாக்கில் வணிகரீதியிலான டிரான்சிஸ்டரை வடிவமைத்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
14 ரீஸ் வில்சன் (1869)- சார்லஸ் தாமஸ் ரீஸ் வில்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர். மேகக்கூட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை முதன்முதலில் வெளியிட்டவர். 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
15 கலிலியோ கலிலி (1564) – இத்தாலி நாட்டுக்காரரான இவர், சிறந்த வானியலாளர். வானியல் தொலைநோக்கி வடிவமைப்பில் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன இயற்பியலின் தந்தை இவர்.
18 வோல்டா அலெஸ்சாண்டரோ (1745) – இத்தாலி நாட்டுக்காரரான இவர், 1800-ல் பேட்டரியைக் கண்டுபிடித்தார்.
19 நிக்கோலஸ் கோபர்நிகஸ் (1473) – போலந்து நாட்டுக்காரரான இவர், வானியலாளர். சூரிய மையக் கொள்கையை வகுத்துத் தந்து, வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற வாதத்தைச் சரியல்ல என்று நிரூபித்து, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.
20 லட்விக் போல்ட்ஸ்மேன் (1844) – ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பெரும் பங்களிப்பை அளித்தவர். வளிமங்கள் மீது சீரான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
21 சாந்தி ஸ்வரூப் பட்நகர் (1894) – இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி. இவரது பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கப்படுகிறது.
22 பெல்டியர் (1785) – ஜீன் சார்லஸ் அதானஸ் பெல்டியர், பிரான்ஸ் இயற்பியலாளர். மின் விசையில் ஏற்படும் விளைவுகளை பெல்டியர் விளைவு என்ற தத்துவத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
24 பியோட்டர் லேப்தேவ் (1866) – ரஷ்ய இயற்பியலாளர். திடப் பொருளில் ஒளியின் அழுத்தத்தை முதன்முதலில் கண்டறிந்தவர். மின்காந்த அலைகள் குறித்து இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
26 கிளாப்பிரான் (1799) – கிளாப்பிரான் பெனாய்ட் பால் எமிலி, பிரான்ஸ் இயற்பியலாளர். நவீன தெர்மோடைனமிக் கொள்கையை வகுத்தவர்.
மார்ச்
மார்ச்-3
• அலெக்சாண்டர் கிரகாம்பெல்(1847) – பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர்.மார்ச்-6
• பிரான்ஹோபர்(1787) – ஜெர்மனைச் சேர்ந்த ஒளியியலாளர். சூரிய ஒளியக்கதிரில் உள்ள கரும் பட்டைகளை இவர் கண்டுபிடித்ததால், இந்தக் கரும்பட்டைகளுக்கு பின்னாளில் பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர் வந்தது. 1814ஆம் ஆண்டு நிறமாலைமானியை (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) கண்டுபிடித்தார்.மார்ச்-6.
• கார்னு(1841) – மேரி ஆல்பிரட் கார்னு, பிரான்ஸ் இயற்பியலாளர். ஒளியியல் மற்றும் நிறமாலைமானி குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.மார்ச்-8.
• ஒட்டோ ஹான்(1879) – அணு வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மனியைச் சேர்ந்தவர். ரேடியோ ஆக்டிவிட்டி மற்றும் ரேடியோ கெமிஸ்ட்ரி குறித்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்.மார்ச் -12
• குஸ்டவ் கிர்சாஃப் (1824) – ஜெர்மன் இயற்பியலாளர். எலெக்ட்ரிக்கல் சர்க்யூட், ஸ்பெக்ட்ரோஸ்கோபி, வெப்பத்தினால் கரும்பொருளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்தவர்.
மின் சுற்று குறித்து இவரது கொள்கைகள், கிர்சாஃப் விதி என்று அழைக்கப்படுகிறது. வெப்ப வேதியியல் குறித்தும் விதிகளை வகுத்தவர் இவர்.மார்ச் -14
• ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879) – ஜெர்மனில் பிறந்த இவர், நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1921-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார். ஒளிமின்விளைவு விதி குறித்தும், குவாண்டம் தியரி குறித்தும் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.மார்ச்-15
• வென்ச்சுரி(1746) – ஜியோவன்னி பட்டிஸ்டா வென்ச்சுரி, இத்தாலிய இயற்பியலாளர். ஒரு குழாயின் சுருங்கிய பகுதி வழியாக ஒரு திரவம் பாயும்போது, திரவ அழுத்தம் குறையும் என்பதைக் கண்டுபிடித்தார்.மார்ச்-16
• ஜார்ஜ் சைமன் ஓம்(1789) – ஜெர்மனியில் பிறந்த இவர், ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். மின்சாரத்தில் மின் அழுத்தத்திற்கான தொடர்பை வரையறுத்தார். அதுவே, ஓம்ஸ் விதி என்று அழைக்கப்படுகிறது.மார்ச்-18
• ருடால்ஃப் டீசல்(1858) – ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல், ஜெர்மன் பொறியாளர். டீசல் என்ஜினை முதன்முதலில் வடிவமைத்தவர் இவர்தான்.மார்ச்-19
• ஃபிரட்ரிக் ஜோலியட்(1900) – ஜீன் பிரட்ரிக் ஜோலியட் கியூரி, பிரான்ஸ் இயற்பியலாளர். 1935-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி மேடம் கியூரியின் மகள் ஐரின் கியூரி இவரது மனைவி.மார்ச்-20
• ஃபிரிட்ஸ் புளூமர்(1881) – ஆஸ்திரிய இயற்பியலாளர். ஒலி அலைகளை பதிவு செய்யும் மேக்னட்டிக் பட்டையை உருவாக்கினார்.மார்ச்-21
• ஃபோரியர்(1768) – ஜோசப் ஃபோரியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மற்றும் இயற்பியல் ஆய்வாளர். கிரீன்ஹவுஸ் விளைவு விதியை முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் இவர்.மார்ச்-22
• ராபர்ட் அண்ட்ரூஸ் மில்லிகன்(1868) – அமெரிக்க இயற்பியலாளர். ஒளிமின் விளைவு சோதனையில் எலெக்ட்ரானின் பங்கு குறித்தது இவரது ஆய்வு.மார்ச்-23
• பெய்ரி சைமன் லேப்லாஸ் (1749) – பிரான்ஸை சேர்ந்த இவர், கணித இயற்பியலில் இவரது கண்டுபிடிப்பு லேப்லாஸ் விதி.மார்ச்-24
• ஜோசப் ஸ்டீபன்(1835) – ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், கணிதம் மற்றும் இயற்பியலில் வகுத்துக் கொடுத்த ஸ்டீபன் –போல்ட்ஸ்மென் விதி, ஸ்டீபன் சிக்கல், ஸ்டீபன் சூத்திரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இவரது ஆய்வுப் பெருமையை பறை சாற்றி நிற்கின்றன.மார்ச்-26
• சர் பெஞ்சமின் தாம்ஸன்(1753) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், வெப்ப இயக்க விசைகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.மார்ச்-27
• வில்ஹெம் ராண்ட்ஜென்(1845) – ஜெர்மனை சேர்ந்த இவரது கண்டுபிடிப்பு – எக்ஸ் கதிர் அல்லது ராண்ட்ஜன் கதிர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.மார்ச்-27
• ஹார்ட்ரி(1897) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், அணுக்கரு இயற்பியலில் எண்ணியல் பகுப்பாய்வை மேற்கொண்டவர்.மார்ச-30
• ராபர்ட் புன்சேன்(1811) – ஜெர்மனைச் சேர்ந்த இவர், வேதியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் விளக்கை கண்டுபிடித்தார். அதனால் அந்த விளக்குக்கு, புன்சேன் விளக்கு என்று பெயர் வந்தது. சீசியம் மற்றும் ரூபிடியம் தனிமங்களை வெப்பப்படுத்தும்போது ஏற்படும் கதிர்வீச்சு குறித்தும் இவர் ஆய்வு செய்திருக்கிறார்.மார்ச்-31
• ராபர்ட் வில்ஹெம் புன்சேன்(1811) – ஆஸ்திரேலியாவில் பிறந்த பிரிட்டிஷ் இயற்பியலாளர். எக்ஸ் கதிரின் விளிம்பு வளைவை கண்டுபிடித்தார். எதிரி நாட்டு ஆயுதங்களை ஒலி அலைகள் மூலம் கண்டுபிடிக்கும் இவரது தொழில்நுட்பம் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் பயன்படுத்தப்பட்டது.
ஏப்ரல்
ஏப்ரல்-4
• சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா (1942) – சாம் பிட்ரோடா என்று அழைக்கப்படும் இவர் ஒரிஸா மாநிலத்தவர். இந்தியாவின் தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது.தற்போது, இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதமருக்கு ஆலோசகராக இருக்கிறார்.ஏப்ரல்-9
• சீபக்(1770) – தாமஸ் ஜோஹன் சீபக்,ஜெர்மானிய இயற்பியலாளர். தெர்மோ எலக்ட்ரிக் விதியைக் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-14
• கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்(1629) – டச்சு நாட்டைச் சேர்ந்த இவர், பெண்டுலம் கடிகாரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-15
• லியோன்ஹார்டு யூலர்(1707) – சுவிஸ் நாட்டைச் சேர்ந்த, திரவ இயக்கவியல், ஒளியியல், வானியல் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.ஏப்ரல்-16
• வில்பர் ரைட்(1867) – ரைட் சகோதரர்களின் ஒருவரான இவர், விமானத்தை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்காற்றியவர்.ஏப்ரல்-18
• ஃபோகால்ட்(1819) – பிரான்ஸை சேர்ந்த இவர், பூமி சுழல்வதை கணக்கிடும் ஊசல் ஒன்றை வடிவமைத்தார். அதுவே, ஃபோகால்ட் பெண்டுலம் எனக் கூறப்படுகிறது.ஏப்ரல்-20
• ஃபோர்ப்ஸ்(1809) – ஜேம்ஸ் டேவிட் ஃபோர்ப்ஸ்,ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். நில நடுக்கத்தின் வேகம், திறன் ஆகியவற்றைக் கணக்கிடும் சிஸ்மோமீட்டர் எனும் கருவியை 1842-ல் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-21
• ஜீன் பேப்டிஸ்ட் பயட்(1774) – பிரான்ஸை சேர்ந்த இவர், மின்காந்தவியலில் சில முக்கிய தத்துவங்களை வரையறுத்துள்ளார். இவர் வகுத்து தந்த வரையறைகள் பயட் சாவர்ட் விதி என்று அழைக்கப்படுகிறது.ஏப்ரல்-22
• பாய்சுலே(1797) – ஜீன் லூயிஸ் மேரி பாய்சுலே, பிரான்ஸை சேர்ந்தவர். மனித உடலில் குறுகிய குழாயில் ரத்தம் பாய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.ஏப்ரல்-22
• ராபர்ட் ஓப்பன் ஹேமர்(1904) – ஜூலியஸ் ராபர்ட் ஓப்பன் ஹேமர், அமெரிக்கவைச் சேர்ந்தவர். அணுகுண்டுவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.ஏப்ரல்-23
• மேக்ஸ் பிளாங்க்(1858) – ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர், குவாண்டம் தியரியை உருவாக்கியவர். இதற்காக, 1918-ல் நோபல் பரிசு பெற்றார்.ஏப்ரல்-25
• குக்லிமோ மார்க்கோனி(1874) – இத்தாலியைச் சேர்ந்த இவர், வானொலியைக் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-25
• வொல்ஃப்கேங் பாலி(1900) – ஆஸ்திரியவைச் சேர்ந்த இவர், வேதியியலின் முழு கட்டமைப்பை வரையறுக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர்.ஏப்ரல்-27
• சாமுவேல் மோர்ஸ்(1791) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், டெலிகிராப்பை உலகிற்கு தந்த கண்டுபிடிப்பாளர்.ஏப்ரல்-29
• கார்ல் டிரைஸ்(1785) – ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர், 1821 டைப்ரைட்டர் இயந்திரத்தை வடிவமைத்தார். பெடல் இல்லாத சைக்கிளையும் வடிவமைத்தவர் இவர்.ஏப்ரல்-29
• ஹென்றி பாயின்கேர் (1854) – பிரான்ஸை சேர்ந்த இவர், ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தத்துவத்தை வகுத்தவர்.ஏப்ரல்-30
• காஸ் (1777) – கணிதம், இயற்பியல், வானியல், புவிப்பரப்பு (Earth surface) ஆகிய நான்கு துறைகளிலும் அதிக பங்களிப்பு அளித்தவர். எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் குறித்து ஆய்வு செய்தவர். இயற்கணிதத்தின் அடிப்படை விதிகளை வகுத்துக் கொடுத்தவர்.
மே
மே-1
-
ஜோஹன் ஜேக்கப் பால்மர் (1825) – சுவிட்சர்லாந்து கணிதவியல் இயற்பியலாளர். ஹைட்ரஜன் அணுவில் உள்ள வரிகள் குறித்த விதிகளை விளக்கியுள்ளார். இந்த விதிகள் பின்னாளில் பால்மர் விதிகள் என்று அழைக்கப்பட்டன.
மே -3
-
ஜி.பி. தாம்ஸன் (1892) – பிரிட்டனைச் சேர்ந்த சர் ஜார்ஜ் பேஜட் தாம்ஸன், எலெக்ட்ரான் விளிம்பு சோதனையில் எலெக்ட்ரானின் குணாதிசயங்கள் குறித்து வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார். நோபல் பரிசுபெற்றவர்.
மே – 10
-
இஸ்சிங் (1900) – ஏர்னஸ்ட் இஸ்சிங் ஜெர்மன் இயற்பியலாளர். காந்தவியல் கொள்கைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
மே -11
-
ரிச்சர்ட் ஃபென்மேன் (1908) – அமெரிக்க இயற்பியலாளர், குவாண்டம் பின்னியக்க விசையியல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டவர். இந்த ஆய்வுக்காக 1965 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
மே – 15
-
பேரி கியூரி (1859) – பிரான்ஸ் இயற்பியலாளர். கதிர்வீச்சு, கிரிஸ்டலோகிராபி, காந்தவியல் குறித்து பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார். கதிர்வீச்சு குறித்த இவரது ஆராய்ச்சிக்கு 1903ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
மே -21
-
காரியோலிஸ் (1792) – பிரான்ஸ் இயற்பியலாளர், மெக்கானிக்கல் என்ஜினீயர். உராய்வு மற்றும் நீரியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
மே -23
-
ஜான் பர்தீன் (1908) – அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். இயற்பியலுக்காக இரண்டு தடவை நோபல் பரிசைப் பெற்றவர். டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.
மே – 24
-
கில்பர்ட் (1544) – பிரிட்டீஷ் இயற்பியலாளர் மற்றும் தத்துவவாதி. மின்னியல் மற்றும் காந்தவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
மே -24
-
கேப்ரியல் பாரன்ஹீட் (1686) – டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட், டச்சு பொறியாளர். ஆல்கஹால் தெர்மாமீட்டர் மற்றும் மெர்குரி தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்தவர்.
மே -25
-
சீமென் (1865) – காந்தப் புலத்தில் பிரியும் காந்தக் கோடுகள் குறித்து வரையறுத்துள்ளார். இதுவே சீமென் விளைவு என்று அழைக்கப்படுகிறது.
மே -27
-
காசிமெர்ஸ் பஜான்ஸ் (1887) — அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர். கதிரியக்கம் சார்ந்த பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளார்.
மே 30
-
ஹேன்ஸ் ஆல்ப்வென் (1908) – ஹேன்ஸ் ஓலோஃப் கோஸ்டா ஆல்ஃபன், ஸ்வீடன் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். மேக்னட்டோ ஹைட்ரோ டைனமிக்ஸ் துறையில் இவரின் பணிக்காக, 1970ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
மே -31
-
ஸ்கிரிஎஃபர் (1931) – அமெரிக்க இயற்பியலாளர். மீக்கடத்தித் திறன் (சூப்பர் கண்டக்டிவிட்டி) குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.ஜூன்
ஜூன்-1
-
சாடி கார்னாட் (1796) – நிக்கோலஸ் லியோனார்ட் சாடி கார்னட், பிரான்ஸ் ராணுவப் பொறியாளர். வெப்ப இயக்கவிசையின் இரண்டாம் விதியை வகுத்துத் தந்தவர்.
ஜூன் -6
-
கே.எஃப். பிரான் (1850) – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மன் கண்டுபிடிப்பாளர். தனது ஆய்வின் மூலம் கம்பியற்ற தகவல் தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். 1909ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்றவர்.
ஜூன் -7
-
லீனார்ட் (1862) – பிலிப் எட்வர்ட் அண்டன் வான் லீனார்ட், ஹங்கேரியைச் சேர்ந்தவர். கேத்தோடு கதிர் குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 1905ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.
ஜூன் -9
-
வீலர் (1911) – ஜான் ஆர்க்கிபால்ட் வீலர், அமெரிக்க இயற்பியலாளர். அணுப்பிளவின் அடிப்படை கோட்பாடு குறித்து நீல்ஸ்போருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஜூன் -11
-
லிண்டே (1842) – கார்ல் வான் லிண்டே, ஜெர்மன் பொறியாளர். வேதி வினைகளில் ஆக்ஸிஜன் பங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.
ஜூன் -13
-
தாமஸ் யங் (1773) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், ஒளி, ஆற்றல், பார்வைத்திறன் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
ஜூன் -13
-
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (1831) – ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியலாளர். மின்காந்தவியலுக்கு புதிய இலக்கணத்தை குத்துத் தந்தவர்.
ஜூன் -14
-
அகஸ்டின் கூலும் (1736) – பிரான்ஸ் இயற்பியலாளர். நிலைமின்னியலில் ஈர்ப்பு மற்றும் விலக்குவிசையை முதன்முதலில் கூறியவர். இவரின் தத்துவம் ‘கூலும்ஸ் விதி‘ என்று அழைக்கப்படுகிறது.
ஜூன் -17
-
க்ரூக்ஸ் (1832) – சர் வில்லியம் க்ரூக்ஸ், பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த வேதியியல் மற்றும் இயற்பியலாளர். ஸ்பெக்ட்ரோஸ்கோப் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இவர் கண்டுபிடித்த வெற்றுக் குழாய், க்ரூக்ஸ் டியூப் என அழைக்கப்படுகிறது.
ஜூன் -19
-
பிளேய்ஸ் பாஸ்கல் (1623) – இயற்பியல், கணிதவியலாளர் மட்டுமல்லாமல், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் எனும் பன்முகத் திறமை கொண்டவர். திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்த இயற்பியல் தத்துவங்களை முதன்முதலில் ஆராய்ச்சி செய்தவர்.
ஜூன் -21
-
பாய்ஸான் (1781) — சைமன் டெனிஸ் பாய்ஸான், பிரான்ஸைச் சேர்ந்தவர். கணிதம், புவியியல், இயற்பியலாளர். ஒளியின் அலைக் கொள்கையை வெளியிட்டவர்.
ஜூன் – 24
-
விக்டர் ஹெஸ் (1883) – விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிப்பெயர்ந்தவர். காஸ்மிக் கதிர் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்.
ஜூன் -25
-
ஏர்னஸ்ட் (1864) – ஜெர்மன் இயற்பியல் மற்றும் வேதியியலாளர். வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை வகுத்தவர். எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரி, தெர்மோடைனமிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
ஜூன் -26
-
லார்ட் கெல்வின் (1824) – லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞர். பொறியியல் அறிஞர். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பல ஆய்வுகள் மேற்கொண்டவர்.
ஜூன் -27
-
டிமார்கன் (1806) – அகஸ்டஸ் டி மார்கன், பிரிட்டிஷ் கணிதவியலாளர். கணிதத்தில் இவர் வகுத்துக்கொடுத்த வரையறைகள் டி மார்கன் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஜூன் -28
-
மரியா ஜியோபர்ட் மேயர் (1906) – ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். மேரி கியூரிக்கு அடுத்த படியாக இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி இவர். நியூக்ளியர் ஷெல் மாடல் குறித்த இவரின் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜூன் – 28
-
வீஸ்சாக்கர் (1912) – ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் தத்துவஞானி. சூரியமண்டலத்தின் அமைப்பு குறித்த கோட்பாட்டை வரையறுத்தார்.ஜூலை
ஜூலை-1
கோட்பிரீட் லைப்னிட்ஸ் (1646) – ஜெர்மன் மெய்யியலாளரான இவர், நுண்கணிதத்தைக் கண்டுபிடித்தார்.
ஜூலை-1
கல்பனா சாவ்லா (1961) – ஹரியானாவில் பிறந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை. எஸ்.டி.எஸ்.-107 என்ற கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா இறந்தார்.
ஜூலை-2
வில்லியம் ஹென்ரி பிராக்(1862) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், படிகங்களின் அமைப்பைக் கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியதற்காகவும் 1915-ல் நோபல் பரிசு பெற்றார்.
ஜூலை-2
மயில்சாமி அண்ணாதுரை (1958) – தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர். நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான் – 1 திட்டத்தின் திட்ட இயக்குநர்.
ஜூலை-4
ஹேன்ஸ் பெத்(1902) – ஜெர்மனைச் சேர்ந்த இவர், குவாண்டம் எலெக்ட்ரோடைனமிக்ஸ், அணு இயற்பியல், வானியல் இயற்பியல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
ஜூலை-8
பியோட்டர் கபீட்சா (1894) – ரஷ்யாவைச் சேர்ந்த இவர், காந்தப் புலத்தில் மின் தன்மை உருவாவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
ஜூலை-9
ஜான் வீலர்(1856) – அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆர்க்கிபால்ட் வீலர், அணு இணைவுக் கண்டுபிடிப்பில் முக்கியக் பங்கு வகித்தவர்.
ஜூலை-10
நிக்கோலா டெஸ்லா (1856) – ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவரது மின்னியல், காந்தவியல் ஆய்வுகள் இரண்டாம் தொழிற்புரட்சி உருவாகக் காரணமாய் இருந்தது.
தற்கால மின்னியலின் காப்பாளர், இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர், இயற்பியலின் தந்தை என்று பலவாறு பாராட்டுக்களைப் பெற்றவர்.
ஜூலை-14
ஜார்ஜ் கிரீன்(1793) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், மின்னியல் மற்றும் காந்தவியலில் முதன்முதலில் கணிதத் தொடர்புகளைப் புகுத்தியவர். கணிதத்தில் இவர் வகுத்துக் கொடுத்த விதிகள், கிரீன்ஸ் விதிகள் எனப்படுகின்றன.
ஜூலை-18
லாரன்ட்ஸ்(1853) – டச்சு நாட்டைச் சேர்ந்த இவருக்கு, சீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும், கண்டுபிடித்ததற்காகவும் 1902ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜூலை-19
ஜெயந்த் நாரளிகார்(1938) – இந்திய வானியற்பியலாளர் – அண்டவியலாளர். நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில் நாரளீக்கர் கோட்பாட்டை உருவாக்கினார்.
ஜூலை-23
ஸ்காட்கி (1886) – ஸ்காட்கி டையோடு, ஜெர்மனைச் சேர்ந்தவர். செமி கண்டக்டர் டயோடைக் கண்டுபிடித்தார்.
ஜூலை-25
ரோஸலிண்ட் பிராங்க்லின்(1920) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., வைரஸ், நிலக்கரி, கிராபைட் குறித்த அணுக் கட்டமைப்பை விசாரித்தார்.
ஜூலை-27
பேயின்பிரிட்ஜ்(1904) – அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் டாம்ப்கின்ஸ் பேயின்பிரிட்ஜ், பொருண்மை நிறமாலைமானியை (மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்) கண்டுபிடித்தவர்.
ஜூலை-28
ராபர்ட் ஹுக்(1635) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பைக் கண்டுபிடித்தவர். வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தியவர்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட்-2
டின்டால் (1820) – அயர்லாந்து நாட்டு இயற்பியலாளர். டயா மேக்னட்டிசம், வெப்ப கதிர்வீசல் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர்.வான்மண்டலம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.
ஆகஸ்ட்-2
ஆகஸ்ட்-2
பிரபுல்லா சந்திர ரே(1861) – இந்திய வேதியியலாளர். பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் ஸ்தாபகர் இவர்.
ஆகஸ்ட்-3
ஆகஸ்ட்-3
ஃபிட்ஸ் ஜெரால்ட்(1851) – அயர்லாந்தைச் சேர்ந்த இவர், மின்காந்த அலைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
ஆகஸ்ட்-4
ஆகஸ்ட்-4
ஹேமில்டன்(1805) – அயர்லாந்தைச் சேர்ந்த சர் வில்லியம் ரோவன் ஹேமில்டன், ஒளியியல், அல்ஜிப்ரா போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆகஸ்ட்-7
ஆகஸ்ட்-7
பிரில்லோயின்(1889) – பிரான்ஸை சேர்ந்த இவர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ரேடியோ அலைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்.
ஆகஸ்ட்-8
ஆகஸ்ட்-8
பால் டிராக் (1902) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், குவாண்டம் இயக்கவியல், குவாண்டம் மின்னியக்க விசையியலில் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1933-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-9
அமிடோ அவேகாட்ரோ(1776) –இத்தாலியைச் சேர்ந்த இவர், வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாட்ரோவின் விதியைக் கண்டுபிடித்தவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை அவகாட்ரோ எண் என்று அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட்-9
ஆகஸ்ட்-9
ஃபோலர்(1911) – அணு இயற்பியலில் ஆய்வை மேற்கொண்ட அமெரிக்கர். 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-9
அல்லாடி ராமகிருஷ்ணா (1923) – இந்திய இயற்பியலாளர், துகள் இயற்பியல், அணிக்கோவை, குவாண்டம் மெக்கானிக்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். சென்னையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டை நிறுவியவரும் இவர்தான்.
ஆகஸ்ட்-10
ஆகஸ்ட்-10
எம்.கே.வேணு பாப்பு (1927) – இந்திய வானியல் ஆராய்ச்சியாளர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் கல்வி நிலையம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர். சர்வதேச வானியல் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ஆகஸ்ட்– 12
ஆகஸ்ட்– 12
எர்வின் ஸ்க்ரோடின்ஜெர் (1887) – ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், குவாண்டம் பிசிக்ஸ் துறை ஆய்வாளர். 1933-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
ஆகஸ்ட்-12
ஆகஸ்ட்-12
விக்ரம் சாராபாய் (1919) – இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
ஆகஸ்ட்-13
ஆகஸ்ட்-13
ஆங்ஸ்ட்ராம் (1814) – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்ட்ராம், ஸ்வீடனைச் சேர்ந்தவர். வெப்பப்படுத்தப்பட்ட ஒரு வாயு எந்த அலைநீளங்களில் ஒளியை உமிழுமோ குறைவான வெப்பநிலையில் உள்ளபோது அந்த வாயு அதே அலைநீளங்களை உட்கவரும் என்பது அவரது கண்டுபிடிப்பு.ஆகஸ்ட்-14
ஒயர்ஸ்டெட் (1777) – டென்மார்க்கைச் சேர்ந்த ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட், மின்காந்தப் புலங்களை மின்சாரம் உருவாக்கும் என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர்.ஆகஸ்ட்-14
டெம்ஸ்டர் (1886) – கனடாவைச் சேர்ந்த ஆர்தர் ஜெஃப்ரி டெம்ஸ்டர், யுரேனியம் ஐசோடோப்பைக் கண்டுபிடித்தவர்.
ஆகஸ்ட்-15
ஆகஸ்ட்-15
டிபிராக்லி(1892) – பிரான்ஸைச் சேர்ந்த இவர், 1929-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
ஆகஸ்ட்-16
ஆகஸ்ட்-16
லிப்மென் (1845) – பிரான்ஸைச் சேர்ந்த காபிரியேல் லிப்மென், குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுக்கும் சோதனை ஆய்வுக்காக 1908-ல் நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-19
பிளேஸ் பாஸ்கல் (1623)- பிரான்ஸைச் சேர்ந்த இவர், முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். வடிவியல் மற்றும் நிகழ்தகவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.ஆகஸ்ட்-23
ஒஸ்பார்ன் ரெனால்ட்ஸ் (1842) – அயர்லாந்தைச் சேர்ந்த இவர், திட மற்றும் திரவங்களுக்கு இடையில் வெப்பப் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்தவர்.
ஆகஸ்ட்-26
ஆகஸ்ட்-26
ஆண்டோய்ன் லவாய்சியர்(1743) – பிரான்ஸைச் சேர்ந்த இவர், நவீன வேதியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். தனிமங்களை வகைப்படுத்தியதில் இவரின் பங்கு முக்கியமானது.
ஆகஸ்ட்-26
ஆகஸ்ட்-26
பிரான்க்(1882) – ஜெர்மனைச் சேர்ந்த ஜேம்ஸ் பிராங்க், ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர்.
1925ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.ஆகஸ்ட்-30
ஏர்னஸ்ட் ரூதர்போர்டு(1871) – நியூசிலாந்தைச் சேர்ந்த இவர், அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையைக் கண்டுபிடித்தவர். 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
ஆகஸ்ட்-31
ஆகஸ்ட்-31
ஹெல்மோல்ட்ஸ்(1821) – ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியலாளரான இவர், இயற்கையின் தத்துவத்தை விளக்கியவர். கண், மற்றும் பார்வைத்திறன் குறித்த கணிதக் கோட்பாடுகளை வரையறுத்தவர்.
செப்டம்பர்
செப்டம்பர் -1
-
பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் (1877) –பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1922ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். எக்ஸ்ரே மற்றும் ரேடியோ ஆக்டிவிட்டி துறைகளில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
செப்டம்பர் – 2
-
பிரட்ரிக் சாடி (1877) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1921ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். அணுக்கரு இணைவு குறித்தது இவரது ஆராய்ச்சி.
செப்டம்பர் – 3
-
கார்ல் டேவிட் ஆண்டர்சன் (1905) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 1936-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். 1932-ல் பாசிட்ரான் துகள் கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
செப்டம்பர் – 6
-
ஜான் டால்டன் (1766) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், நவீன அணு இயற்பியல் உருவாவதற்கு வழிவகுத்தவர். நிறக் குருடு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
செப்டம்பர் – 9
-
கால்வானி (1737) – இத்தாலியைச் சேர்ந்த இவர், பயோ எலெக்ட்ரிசிட்டி பயன் குறித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர்.
செப்டம்பர் – 9
-
பாயிண்டிங் (1852) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், மின்காந்தப் புலத்தில் ஆற்றலின் ஓட்டம் குறித்து முதலில் விளக்கியவர்.
செப்டம்பர் – 10
-
ஏலவர்தி நாயுடம்மா (1922) – ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாயுடம்மா, சென்னையில் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட பிரபல விஞ்ஞானி.
இந்திய தோல் தொழிற்சாலைகளின் மதிப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
செப்டம்பர் – 10
-
காம்ப்டன் (1892) – அமெரிக்கவைச் சேர்ந்த இவர், 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். சைக்ளோட்ரான் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.
செப்டம்பர் – 11
-
ஜீன்ஸ் (1877) – பிரிட்டனைச் சேர்ந்த இவர், இயற்பியல் மற்றும் வானியலாளர். குவாண்டம் தியரி, கதிர்வீச்சு சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டவர்.
செப்டம்பர் – 12
-
ஐரின் கியூரி (1897) – நோபல் பரிசு பெற்ற தம்பதியான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளான ஐரின் கியூரி, பிரெஞ்சு அறிவியலாளர். இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட் கியூரியும் இணைந்து 1935-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றனர்.
செப்டம்பர் – 15
-
எம். விஸ்வேஸ்வரய்யா (1860) – கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. புகழ் பெற்ற பொறியாளரான இவரது நினைவாக செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் – 15
-
ஜெல் மேன் (1929) – அமெரிக்க இயற்பியலாளர். அடிப்படை துகள் கோட்பாட்டிற்காக 1969-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
செப்டம்பர் – 20
-
டீவார் (1842) – ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், அட்டாமிக் அண்ட் மாலிக்யூலர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
செப்டம்பர் – 21
-
காமர்லிங் ஒன்ஸ் (1853) – நெதர்லாந்தைச் சேர்ந்த இவர், மீக்கடத்துத் திறனை கண்டுபிடித்தவர்.
செப்டம்பர் – 22
-
மைக்கேல் பாரடே (1791) – பிரிட்டனைச் சேர்ந்தவர். மின்காந்தவியல், மின் வேதியியல் துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
செப்டம்பர் – 23
-
பைசூ (1819) – பிரான்ஸ் இயற்பியலாளர். டாப்ளர் விளைவை வெளியிட்டவர். ஒளி மற்றும் வெப்பக் குறுக்கீட்டு விளைவு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
செப்டம்பர் – 29
-
என்ரிக்கோ ஃபெர்மி (1901) – இத்தாலியைச் சேர்ந்த இவரது நினைவாக, 1952-ல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது. 1938-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியவர்.
அக்டோபர்
அக்டோபர் – 6
அக்டோபர் – 6
-
மேக்னாட் சாகா (1893) – இந்தியாவைச் சேர்ந்த இவர், விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவும் சாகா எனும் அயனியாக்க சமன்பாட்டை உருவாக்கியவர்.
அக்டோபர் – 7
-
நீல் ஹென்ரிக் போர் (1885) –டென்மார்க்கைச் சேர்ந்த இவர், அணுவியலில் அடிப்படை கருத்தாக்கங்களை வெளியிட்டவர். 1922-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
அக்டோபர் – 8
-
ஜி.என்.ராமச்சந்திரன் (1922) – கேரளாவைச் சேர்ந்த இவர், உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். பெப்டைடுகளின் கட்டமைப்பை அறிய உதவும் வரைபடத்தை வெளியிட்டவர்.
அக்டோபர் – 8
-
லீ சாட்லியர் (1850) – பிரான்ஸ் வேதியியலாளர். ரசாயன சமநிலை அமைப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இவரது ஆய்வு, லீ சாட்லியர் தத்துவம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அக்டோபர் – 9
-
வான் லாவ் (1879) – ஜெர்மன் இயற்பியலாளர். படிகங்களில் எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவு குறித்த ஆய்வுக்காக, 1914-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
அக்டோபர் – 10
-
ஹென்றி காவெண்டிஸ் (1731) – பிரான்ஸ் இயற்பியலாளர். ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர். ஹைட்ரஜன் மூலக்கூறு சேர்க்கையால் மட்டுமே நீர் கிடைக்கும் என்பதை கண்டுபிடித்தவர்.
அக்டோபர் – 15
-
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931) – தமிழகத்தைச்சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளிப் பொறியாளர். முன்னாள் குடியரசுத் தலைவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.
அக்டோபர் – 18
-
ஜோர்டான் (1902) – ஜெர்மனைச் சேர்ந்த இவர், குவாண்டம் மெக்கானிக்ஸ் மற்றும் குவாண்டம் ஃபீல்ட் தியரி துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
அக்டோபர் – 19
-
சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910) – தமிழகத்தில் பிறந்த வானியல் இயற்பியலாளர். விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
அக்டோபர் – 20
-
சாட்விக் (1891) – பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூட்ரான் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்.
அக்டோபர் – 21
-
ஆல்பிரட் நோபல் (1833) – ஸ்வீடனைச் சேர்ந்த இவர், டைனமைட் வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர். இவரது பெயரால்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அக்டோபர் – 22
-
டேவிஷன் (1881) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், எலெக்ட்ரான் விளிம்பு விளைவு சோதனைக்காக 1937-ல் நோபல் பரிசு பெற்றார்.
அக்டோபர் – 23
-
கில்பர்ட் என். லெவிஸ் (1875) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், அணுக்களுக்கு இடையேயான இணைப்பை கோவலன்ட் இணைப்பு எனும் தத்துவம் மூலம் விளக்கியவர்.
அக்டோபர் – 23
-
வெபர் (1905) – ஜெர்மனைச் சேர்ந்த இவர், முதல் எலெக்ட்ரோமேக்னட்டிக் டெலிகிராபை கண்டுபிடித்தவர்.
அக்டோபர் – 30
-
ஹோமி ஜஹாங்கீர் பாபா (1909) – இந்தியாவைச் சேர்ந்த அணு இயற்பியலாளர். இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்ட்டல் ரிசர்ச் கல்வி நிலையம், டிராம்பே அட்டாமிக் எனர்ஜி எஸ்டேபிளிஷ்மெண்ட் அமைப்புகளின் முதல் இயக்குநர் இவர்.நவம்பர்
நவம்பர் -3
டேனியல் ரூதர்போர்டு (1749) – ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், முதன்முதலில் நைட்ரஜனை தனிமைப்படுத்தும் சோதனையில் வெற்றிகண்டவர்.
நவம்பர் -7
சர். சி.வி. ராமன் (1888)– தஞ்சாவூர் அருகே மாங்குடியில் பிறந்த இவர், 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்போது, சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். அதுவே, ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது.
நவம்பர் -7
மேரி கியூரி (1867)— 1903-ல் இயற்பியலுக்காகவும் 1911-ல் வேதியிலுக்காகவும் நோபல் பரிசு பெற்றவர். ரேடியம், பெலோனியம் ஆகிய கதிர்வீச்சு மூலங்களைக் கண்டுபிடித்தார்.
நவம்பர் – 8
ரிட்பெர்க் (1854)– ஸ்வீடனைச் சேர்ந்த இவர், போட்டானின் அலைநீளத்தை முதன்முதலில் கணக்கிட்டவர்.
நவம்பர் – 11
அனில் ககோட்கர் (1943)– மும்பையைச் சேர்ந்த இவர், இந்திய அணுசக்திக் கமிஷன் தலைவராக இருந்தவர். 1998-ல் பத்மஸ்ரீ விருதையும், 1999-ல் பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
நவம்பர் – 12
நவம்பர் – 12
லார்ட் ரேலெய் (1842)– பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1904-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். வானம் நீல நிறமாக இருப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டவர்.
நவம்பர் – 17
விக்னர் (1902)– ஹங்கேரியைச் சேர்ந்த இவர், அணு உட்கரு ஆய்வுகளை மேற்கொண்டவர். Xe – 135 என்ற துகளைக் கண்டுபிடித்தவர்.
நவம்பர் – 20
ஹப்பிள் (1889)– அமெரிக்காவைச் சேர்ந்த இவர், விண்மீன்கள் பூமியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சரிவிகிதத்தில் அதிகரித்துள்ளது என்பதைக் கூறியவர்.
நவம்பர் – 23
ஹென்றி மோஸ்லே (1887)– பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1916ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். தற்கால அணு இயற்பியலுக்கு பெரும் பாலமாக அமைந்தது இவரது ஆய்வுகள்.
நவம்பர் – 23
வாண்டர்வால்ஸ் (1837)– நெதர்லாந்தைச் சேர்ந்த இவர், 1910-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். மூலக்கூறுகளுக்கு இடையேயான இயக்கம் மற்றும் விசைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். இவரது ஆய்வுக் கோட்பாடுகள், வாண்டர்வால்ஸ் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
நவம்பர் – 26
நவம்பர் – 26
யஷ்பால் (1926)– இந்திய கல்வியாளர் மற்றும் விஞ்ஞானி. பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராக இருந்தவர். 1976-ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.
நவம்பர் – 27
ஆண்டர்ஸ் செல்சியஸ் (1701)– ஸ்வீடனைச் சேர்ந்த வானியலாளர். 1742-ல் செல்சியஸ் வெப்ப அளவுமானியைக் கண்டுபிடித்தவர்.
நவம்பர் – 29
டாப்ளர் (1803)– ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்தத் தத்துவங்கள், டாப்ளர் விளைவு என அழைக்கப்படுகிறது. வௌவால்கள் மீயொலியை உருவாக்கும் பண்பு கொண்டவை என்பதை உலகுக்கு சொன்னவர் டாப்ளர்தான்.
நவம்பர் – 30
சர் ஜகதீஷ் சந்திரபோஸ் (1858)– தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். வெப்பம், குளிர், ஒலி, ஒளி போன்ற புறத் தூண்டல்கள் மனிதர்களை எப்படிப் பாதிக்கிறதோ அதேபோல் தாவரங்களையும் பாதிக்கிறது என்பதை நிரூபித்தார்.
டிசம்பர்
டிசம்பர் – 4
சர். கே.எஸ்.கிருஷ்ணன் (1898)– சர். கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டவர். 1954-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 1961-ல் பட்நகர் நினைவுப் பரிசு பெற்றவர்.
டிசம்பர் – 5
டிசம்பர் – 5
சோமர்ஃபீல்டு (1868) – ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். அணு மற்றும் குவாண்டம் இயற்பியல் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தவர்.
டிசம்பர் – 5
வெர்னர் ஹெய்ன்ஸ்பர்க் (1901)– ஜெர்மனியின் அணு ஆற்றல் திட்டத் தலைவராக இருந்தவர். குவாண்டம் பொறிமுறை வளர்ச்சியில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
டிசம்பர் – 6
ஜோசப் கே லூசாக் (1778) – பிரான்ஸை சேர்ந்த இவர், தரையிலிருந்து மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவதை பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்தார்.
டிசம்பர் – 11
மேக்ஸ் பார்ன் (1882)– ஜெர்மனைச் சேர்ந்த இவர், 1954-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். திடநிலை இயற்பியல் மற்றும் ஒளியியலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.
டிசம்பர் – 14
டைக்கோ பிரே (1546)– டென்மார்க் அரச பரம்பரையைச் சேர்ந்த இவர் கண்டுபிடித்த நட்சத்திரம் சூப்பர் நோவா. கோள்களின் இயக்கத்தை துல்லியமாகக் கணக்கிட்டவர்.
டிசம்பர் – 15
ஹென்றி பெக்கோரல் (1852)– பிரான்ஸை சேர்ந்த இவர், கதிரியக்கக் கண்டுபிடிப்புக்காக 1913-ல் நோபல் பரிசு பெற்றவர்.
டிசம்பர் – 15
டிசம்பர் – 15
ஸ்டார்க் (1874)– ஜெர்மனைச் சேர்ந்த இவர், 1919-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
டிசம்பர் – 17
ஜோசப் ஹென்றி (1797)– அமெரிக்காவைச் சேர்ந்த இவர், சுய மின்தூண்டல் மற்றும் மின்காந்த நிகழ்வுகளைக் கண்டுபிடித்தவர்.
டிசம்பர் – 18
ஜே.ஜே.தாம்ஸன் (1856)– பிரிட்டனைச் சேர்ந்த இவர், எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர். இதற்காக, 1906-ல் நோபல் பரிசு பெற்றார்.
டிசம்பர் – 19
மைக்கல்சன் (1852) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 1907-ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர். ஒளியின் வேகத்தை தனது சோதனையின் மூலம் கண்டுபிடித்தவர். அந்த சோதனையின் பெயர், மைக்கல்சன் மார்லி சோதனை என்று அழைக்கப்படுகிறது.
டிசம்பர் – 22
ஸ்ரீனிவாச ராமானுஜம் (1887)– ஈரோட்டில் பிறந்த கணித மேதை. எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
டிசம்பர் – 22
ஜான்.சி.ஸ்லாட்டர் (1900)– அமெரிக்காவைச் சேர்ந்த இவர், அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் திடப்பொருள்களின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
டிசம்பர் – 24
டிசம்பர் – 24
ஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் (1818)– பிரிட்டனைச் சேர்ந்த இவர், வெப்பத்தின் கொள்கைகளை விளக்கியவர். இவர் வகுத்துக் கொடுத்த கொள்கைகள்தான் ஆற்றல் அழிவின்மை விதி உருவாகக் காரணமாய் இருந்தது.
டிசம்பர் – 25
ஐசக் நியூட்டன் (1842)– பிரிட்டனைச் சேர்ந்த இவரது புவியீர்ப்பு விதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
டிசம்பர் – 27
ஜோஹன்னெஸ் கெப்ளர் (1571)– ஜெர்மனியைச் சேர்ந்த இவர், கோள்களின் இயக்க விதிகளை வரையறுத்தவர். ஒரு வானியலாளராகவும், சோதிடராகவும் பெயர் பெற்றவர்.
இயற்பியல் சாதனையாளர்களின் பிறந்த தினம் அடங்கிய காலண்டரை சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் முதலாண்டு மாணவர்கள் தயாரித்துள்ளனர்.
தொகுப்பு: என்.சுரேஷ்குமார்.
தொகுப்பு: என்.சுரேஷ்குமார்.
Source: புதிய தலைமுறை கல்வி பத்திரிகை .