அன்பு நண்பர்களே, 
வணக்கம். 
அனைவரும் நலமாக பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 
கொரோனா என்னும் கொடிய காலகட்டத்தில் நம் பிள்ளைகளை பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்தப் பாடங்களில் படிக்க வைக்கலாம் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சியில் திரு. அஸ்வின் அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டுதல்களை வழங்கயிருக்கிறார்கள். 
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு. அஸ்வின் அவர்கள் தமது முதுகலை பொறியியல் படிப்பை தேசிய தொழில்நுட்ப மையம், வாராங்கள்லில் பயின்றவர். பிறகு பல ஆண்டுகள் கரூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். தற்பொழுது The Entrance Gate என்னும் கல்வி வழிகாட்டி மையத்தை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். அதோடு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களுக்கு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
  இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது நிகழ்ச்சியின் விருந்தினர் அவர்களிடம் தங்களது கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். 

👉இதற்கு கட்டணம் ஏதுமில்லை. 
👉இந்த நிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை 4.7.2020 அன்று மாலை 6 மணி முதல் நடைபெறும்.

👉நிகழ்ச்சி முழுவதும் இலவசமாக யூடியூப் தளத்தில் ஒளிபரப்பப்படும்
👉நிகழ்ச்சியை பார்க்கின்ற வாய்ப்பு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
👉இந்த நிகழ்ச்சியில் உங்கள் சந்தேகங்களை நேரடியாக விருந்தினர் அவரிடம் கேட்கலாம்.
👉 இது ஒரு comats and E2 Academy வழங்கும் இலவச நிகழ்வு. 
👉 உங்கள் சந்தேகங்களை einkedu@gmail.com என்னும் மின்னஞ்சல் வழியே கேட்கலாம்.

Leave a Reply