10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வதுஇடம்24 பேர்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.

விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:

நித்தியா – எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,

ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.

சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,

மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,

ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு:

சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.

பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்,

அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.

ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம்.

ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.

கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி,

சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி,

புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.

சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.


விவசாயி மகள் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் – 99; கணிதம் – 100; அறிவியல் – 100; சமூக அறிவியல் – 99டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் : தமிழ் -98 ; ஆங்கிலம் – 98; கணிதம் – 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் – 100.

கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்:மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.

டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை என்றார். டாக்டராவதே விருப்பம் என்று கூறினார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்மெட்ரிக் பிரிவில் ஈரோடு மாணவி முதலிடம் : மெட்ரிக் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். பாரதிய வித்தியாபவன் மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த அஸ்வினி 493 மார்க்குகள் பெற்றுள்ளார்.

கடந்த மார்ச், ஏப்ரலில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து, 935 பேர் மாணவியர்.

தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர். மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். இவர்களில், 79 ஆயிரத்து, 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து, 458 பேர் மாணவியர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர்.
(494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.

நன்றி: தினகரன், தினமணி .

Leave a Reply