கடந்த சில வாரங்களாகவே பலர் (குறிப்பாக பல கிராமப்புற பெட்டிக்கடைகள், பல பேருந்து நடத்துனர்கள்) 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக்கூறி வாங்க மறுக்கின்றார்கள். மேலும் சிலர் ஒரு குறிப்பிட்ட வகை (இந்திய ரூபாய் குறியீடு இல்லாத) 10 ரூபாய் நாணயம் போலி என வாங்க மறுக்கின்றார்கள்.

வதந்தி:

இந்திய ரூபாய் குறியீடு இல்லாத (படம் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள) 10 ரூபாய் நாணயம்  போலி என பல்வேறு இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குரூப்புகளிலும் வதந்திகள் பரவி வருகின்றன. உதாரணத்திற்கு கூகிளில் “how to find 10 rs fake coin” என்று தட்டச்சு செய்து தேடினால் வரும் இணைய தளங்களில் படம் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம்  போலி என்றும் படம் 2ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய ரூபாய் குறியீடும் 10 சிறு பட்டைகள் (patterns) கொண்ட 10 ரூபாய் நாணயமே உண்மை எனக் கூறுகிறது.

படம் 1: இந்திய ரூபாய் குறியீடு இல்லாத 10 ரூபாய் நாணயம் (2009ம்  வருட வெளியிடு)
படம் 2: புதிய இந்திய ரூபாய் குறியீடு உள்ள 10 ரூபாய் நாணயம் (2011ம்  வருட வெளியிடு)

உண்மை:

படம் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் இந்திய ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே 2009ல் “Connectivity and Information Technology” என்ற கருத்தின் (theme) கீழ் வெளியிடப்பட்டது (இந்திய ரூபாய் குறியீடு ₹ ஜூலை 15, 2010ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது). இந்த 10 ரூபாய் நாணயம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு காண்க: https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=20409

 படம் 2ல் குறிப்பிடப்பட்டுள்ள புதிய 10 ரூபாய் நாணயம் இந்திய ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின் 2011ல் “Issue of new series of Coinsஎன்ற கருத்தின் (theme) கீழ் வெளியிடப்பட்டது. புதிய 10 ரூபாய் நாணயம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு காண்க: https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=24773

இவை இல்லாமல் மேலும் சில வகையான  நாணயங்களையம் ரிசர்வ் வங்கி ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வினை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சுவாமி சின்மயானந்தா பிறந்த நூற்றாண்டு, அம்பேத்காரின் 125வது பிறந்த வருடம், சர்வதேச யோகா தினம், தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பிய நூற்றாண்டு போன்றவற்றை நினைவு கூறும் வகையில் புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது.

மேற்குறிய அணைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் இந்திய நாணயச் சட்டம் 1906 மற்றும் நாணயச் சட்டம் 2011ன் படி செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆதாரம்:

10 ரூபாய் நாணயங்களின் உண்மை நிலை பற்றி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://rbi.org.inல் விளக்கமான செய்தியினை நவம்பர் 20ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. (அறிவிப்பைக் காண: https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=38636)

(pdf வடிவம்: https://rbidocs.rbi.org.in/rdocs/PressRelease/PDFs/PR1257D397CD06A26D430FBC9A1F346B523378.PDF)

Leave a Reply