Stay @ Home Connection Session – 2 விதிமுறைகளுக்கு பார்க்க : https://wp.me/pcknTb-fp
Stay @ Home Connection Session – 2, Connection #29:
விடை: சிவ நாடார் (அல்லது) ஷிவ் நாடார் (Shiv Nadar)
நிறுவனர்,
HCL Technologies
SSN College of Engineering,
Shiv Nadar University
விளக்கம் :
- தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் – சிவன் கோவில் – சிவ
- நா. முத்துக்குமார் – நா
- டார்ஜீலிங் – டார்
சிவ நாடார்
- சிவ நாடார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூலைபொழி என்னும் கிராமத்தில் 1945ல் பிறந்தார்.
- கோயமுத்தூரிலுள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
- தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
- உலகின் எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்து, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து 1976ல் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தைத் தொடங்கினார்.
- இந்தியாவின் முதல் 500 கணினிகள், இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்னாலேயே ஹெசிஎல் கணினி வந்துவிட்டது.
- எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையான கணினிகளில் பெரும்பகுதி ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.
- இன்று, அவர் 9.9 பில்லியன் டாலர் (வருவாய்) நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸின் தலைவராக உள்ளார். இது சந்தை மதிப்பில், இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் சேவை வழங்குநராகும்.
- ஜூலை 2020 இல், எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து விலகினார், இந்த பதவியை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்தார்.
- உலகெங்கிலும் 50 நாடுகளில், 157 நாட்டைச் சேர்ந்தவர்கள் என 168,000ற்கும் மேற்பட்டோர் எச்.சி.எல் டெக்னாலஜிஸில் வேலை செய்கிறார்கள்.
- இந்தியாவின் முன்னணி நன்கொடையாளர்களில் (Philanthropist) ஒருவரான சிவ் நாடார், தனது சிவ் நாடர் அறக்கட்டளைக்கு 662 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், இது கல்வி தொடர்பான பணிகளை ஆதரிக்கிறது.
- இந்தியாவின் மூன்றாவது பணக்காரரும், தமிழ்நாட்டின் பெரிய பணக்காரருமான சிவ் நாடரின் தற்போதைய சொத்து மதிப்பு : ரூபாய் 1786 பில்லியன் கோடி.